வாகன ஓட்டிகளுக்கு வகுப்பு எடுத்த போக்குவரத்து போலீசார்
கடலூரில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வது அதிகரித்ததால் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி போலீசார் வகுப்பு எடுத்தனர். ஆய்வாளர் அமர்நாத், சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் போடுகிறார்கள் நீங்கள் ஏன் போடுவது கிடையாது?...எடுத்து வருபவர்கள் அதனை போடுவது கிடையாது, காய்கறி வைத்து எடுத்து செல்கின்றீர்கள், ரோட் சேஃப்டி ஃபேமிலி சேஃப்டி என சொல்லுங்கள் என்று வகுப்பு எடுத்தார். மேலும் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து செல்பவர்களுக்கு போக்குவரத்து காவலர்கள் இனிப்பு வழக்கினர்.
Next Story
