Traffic Police | Chennai News | 307 புகார்களை கிடப்பில் போட்ட போக்குவரத்து காவல் துறை
சென்னையில் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் அளித்த 307 புகார்கள் மீது போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர், வாகன நெரிசல், நோ-பார்க்கிங், தொடர்பாக பொதுமக்கள், புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து போக்குவரத்து காவல்துறைக்கு ஆன்லைன் வாயிலாக புகார் அளித்து வருகின்றனர். இதற்காக போக்குவரத்து காவல்துறை சார்பில் சமூக வலைதளப்பக்கங்கள் உள்ளன. ஆனால் கடந்த 8 மாதங்களாக கிழக்கு மண்டலம் போக்குவரத்து காவல் துறைக்கு அனுப்பிய 307 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Next Story
