

மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின்படி, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராத ரசீது, பிற மாநிலங்களில் மாநில மொழி மற்றும் ஆங்கிலத்தில், வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ரசீது தமிழில் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் இத்தகைய ரசீது இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.