Traffic | Chennai | மீஞ்சூரில் 5 கி.மீ. தூரத்திற்கு மூச்சுமுட்டும் Traffic..மிரட்டும் டிரோன் காட்சி

Traffic | Chennai | மீஞ்சூரில் 5 கி.மீ. தூரத்திற்கு மூச்சுமுட்டும் Traffic..மிரட்டும் டிரோன் காட்சி

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் துறைமுகங்களுக்கு செல்லும் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு சரக்கு கப்பல்கள் வந்திருந்ததால், சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கையாள்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்டச் சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பொன்னேரி-திருவொற்றியூர் சாலையிலும் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

X

Thanthi TV
www.thanthitv.com