Kamuthi | தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனமாடிஉற்சாகமாக நடந்த சந்தனக்கூடு விழா

தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனமாடிஉற்சாகமாக நடந்த

Kamuthi | தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனமாடிஉற்சாகமாக நடந்த சந்தனக்கூடு விழா

#kamuthi #ramanathapuram #santhanakoodu

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழராமநதியில் உள்ள மஹான் ஜிந்தா மதார் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, வண்ண மின்னொளி அலங்காரத்துடன் சந்தனக்கூடு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அதிகாலையில் தர்ஹாவை அடைந்தது. அப்போது, மேள இசைக்கு ஏற்ப இஸ்லாமிய இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனமாடி அசத்தினர். கிராமத்தின் முக்கிய இடங்களில் கயிறுகளைப் பின்னி, பின்னர் அவிழ்த்து ஆடிய நடனம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், தொடர்ந்து கந்தூரி வைபவம் நடைபெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com