மதுரை மேயர் முற்றுகை

x

திருப்பரங்குன்றத்தில் கழிப்பறை கட்டடத்தை திறந்து வைக்க வந்த மதுரை மாநகராட்சி மேயரை முற்றுகையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில், தூய்மை பாரத இயக்க திட்டத்தின் 35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிப்பிடம் கட்டப்பட்டது. இதனை திறந்து வைக்க வந்திருந்த மேயரிடம், அப்பகுதி வியாபாரிகள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். முறையான குப்பை அகற்றும் வசதி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சிரமப்படுவதாக வியாபாரிகள் புகார் தெரிவித்தனர். மேயரின் பேச்சு வார்த்தைக்கு பின்னர் முற்றுகை போராட்டம் திரும்ப பெறப்பட்டது. மேலும் புதிதாக திறந்த கழிப்பறை மேயர் சென்றபின் மீண்டும் முடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்