திடீரென இரவில் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்..விருதுநகரில் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இரவில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 90 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் செயல்படும் மார்க்கெட்டால் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, ஒரு மாதத்திற்குள் வணிக வளாகத்தை இடித்து அகற்ற சார் ஆட்சியர் உத்தரவிட்டார். இது குறித்த அறிவிப்பு பலகை வருவாய்த்துறை சார்பில் பென்னிங்டன் மார்க்கெட் முன் இரவில் வைக்கப்பட்ட நிலையில், வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story