கம்பீரமாக நடந்து சென்ற புலி - பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்
நீலகிரி மாவட்டம் உதகை அருகே சிங்காரா நீர் மின் நிலையம் செல்லும் சாலையில், கம்பீரமாக நடந்து சென்ற புலியை, சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். கடந்த சில நாட்களாக மாயார் மற்றும் சிங்காரா கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலையில் புலிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து கம்பீரமாக நடந்து வந்த புலி, சாலையை கடந்து மறு பகுதிக்கு சென்றது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது
Next Story
