கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் உற்சாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிலாளர் தின விடுமுறையை ஒட்டி திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆனந்த குளியலிட படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
குமரி மாவட்டத்தின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தொழிலாளர் தின விடுமுறை முன்னிட்டு காலை முதலே ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் - அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை வறட்சியை சந்தித்த நீர்நிலைகள் - தற்போது பெய்து வரும் மழையால் ஆறுகளிலும் மீண்டும் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால், கோதை ஆற்றிலும் தண்ணீர் அதிகரித்து திற்பரப்பு அருவிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் அருவியில் தண்ணீரில் ஆனந்தமாக நீராடி மகிழ்ந்து வருகின்றனர். அருகில் உள்ள நீச்சல் குளம் உட்பட சிறுவர் பூங்காவிற்கும் சென்று குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.
