

பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி கடந்த நான்கு நாட்களாக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். வழக்கமாக கேரளா உட்பட வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில் தற்போது தமிழகத்தில் தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்தனர். கன்னியாகுமரி மட்டுமின்றி திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூல் தொட்டிப்பாலம் என மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தலங்களும் களை கட்டியது.