Ooty | ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்.. படகு இல்லத்தில் ஆகாயத் தாமரைகளால் சிரமம்

ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்.. படகு இல்லத்தில் ஆகாயத் தாமரைகளால் சிரமம்

ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்.. படகு இல்லத்தில் ஆகாயத் தாமரைகளால் சிரமம்

ஆகாயத்தாமரைகள் அதிகரிப்பால் மிதி படகு சவாரியில் சிரமம் விடுமுறையையொட்டி உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மோட்டார் படகுகள், இருவர் மற்றும் நான்கு பேர் செல்லும் மிதி படகுகள், துடுப்பு படகுகளில் சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர். அப்போது பெய்த சாரல் மழையில், குடைகளை பிடித்தும் பாதுகாப்பு உடைகளைத் தலையில் போர்த்தியும் நனைந்தபடி குளுகுளு காலநிலையை ரசித்தனர். இதற்கிடையே, படகு இல்லத்தில் அதிக அளவில் காணப்படும் ஆகாயத்தாமரைகளால் மிதி படகு சவாரியில் சிரமம் ஏற்பட்டதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர். ஆகாயத்தாமரைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com