குளு குளு கொண்டாட்டத்திற்கு ..ஊட்டியை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் || OOTY
பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை, இத்தாலியன் பூங்கா உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் குளுகுளு காலநிலையை அனுபவித்த உற்சாகமடைந்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு வார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி தொடர் விடுமுறையின் போதும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது அதிகரித்து காணப்படுகிறது. சாரல் மழையிலும் உதகை அரசு தாவரவியல் பூங்காவை காண எராலமான சுற்றுலா பயணிகளின் பூங்காவில் குவிந்தனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெறி மாநிலங்களிலில் இருந்து பூங்காவிற்க்கு வந்த சுற்றுலா பயணிகள் இரட்டைக் கட்டிடம், கண்ணாடி மாளிகை, இந்திய வரைபடம், கல்மரம், இத்தாலியன் மற்றும் இலை பூங்காக்களை கண்டு ரசித்தனர். மேலும் இத்தாலியன் பூங்காவில் உள்ள பேண்ட் ஸ்டாண்ட் நிழற் குடையில் என்று தொலைதூரப் பூங்கா காட்சிகளை கண்டு ரசித்தனர். அதேபோல் கிக் யூ புல்வெளி மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் மைதானம் அருகே நின்று புகைப்படம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கேரள மாநில சுற்றுலா பயணிகள் ரீல்ஸ் பதிவிட்டு உற்சாகமடைந்தனர். சமவெளிப் பகுதிகளில் கடும் வெயில் நிலவுவதால் உதகைக்கு வந்ததாக கூறிய சுற்றுலா பயணிகள் சில்லென்ற காலநிலையோடு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல இடங்களை கண்டு ரசிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். இதேபோல் ரோஜா பூங்கா, படகு இல்லம் ,தொட்டபெட்டா மலைச் சிகரத்திலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.
