அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள அகஸ்தியர் அருவியில், கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். குற்றாலத்தில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அகஸ்தியர் அருவிக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. குழந்தைகளுடனும், நண்பர்களுடனும் குடும்பம் குடும்பமாக வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால், வனச் சோதனைச் சாவடி முதல் பாபநாசம் கோவில் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Next Story
