Tourist Family | சர்வதேச மாற்றுத் திறனாளிகள் பட விழாவில் டூரிஸ்ட் ஃபேமிலி

x

ஜூலை 7 முதல் 10 வரை சர்வதேச மாற்றுத் திறனாளிகள் பட விழா

கவின்கேர் மற்றும் ABILITY FOUNDATION சார்பில், சென்னையில் இந்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் திரைப்பட விழா, ஜூலை 7-ஆம் தேதி தொடங்குகிறது.

ஜூலை 10ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில், 11 நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.

இந்நிலையில், திரைப்பட விழா தொடர்பான செய்தியாளர் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகை ரேவதி, சிம்ரன், பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த திரைப்பட விழாவின் முக்கிய அம்சமாக, மாற்றுத் திறனாளிகள் உள்ளடக்கத்தின் கொண்டாட்டம் என்ற தலைப்பின் கீழ் 60 விநாடிகளில் குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. திரைப்பட விழாவில் இத்தாலி, ஈரான், நெதர்லாந்து, போலந்து, மங்கோலியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளின் படங்கள் திரையிடப்பட உள்ளன. இவை தவிர, டூரிஸ்ட் ஃபேமிலி, சித்தாரே சமீன் பார், ஆஹான் ஆகிய 3 இந்திய திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன. குறிப்பாக, டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம், பார்வையற்றோருக்கான ஆடியோ விவரணையுடன் முதல் முறையாக திரையிடப்பட உள்ளது.

சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெறும் திரைப்பட விழாவில், தினசரி நான்கு காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன என்றும், அவற்றை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம் என்றும் விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்