Tornado| பேயாக மாறி புகுந்து அடித்த டொர்னாடோ.. பீஸ் பீஸான 100+ வீடுகள்
பேயாக மாறி புகுந்து அடித்த டொர்னாடோ.. பீஸ் பீஸான 100+ வீடுகள் - தமிழகத்துல இப்படிலாம் நடக்கவே நடக்காதே
தூத்துக்குடியில் டொர்னாடோ சுழற்காற்றால் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தல் பகுதியில், திடீரென வீசிய 'டொர்னாடோ' எனப்படும் அதிபயங்கர சுழல்காற்றால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வாகைக்குளம் பகுதியில் விமான நிலையம் அருகே புழுதியுடன் எழுந்த இந்த சுழல்காற்று, கிராமப்புற பகுதிகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.. இதில் வீடுகளின் மேற்கூரைகள், ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகள் காற்றில் பறந்ததோடு, ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்து மின்விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தாசில்தார் தலைமையில் அங்குப் போர்க்கால அடிப்படையில் சேத மதிப்பீடு கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவக் குழுவினர் மூலம் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன
