பல்ப்பை விழுங்கிய 5 வயது சிறுவன்..நுரையீரலில் சிக்கி மூச்சுத்திணறல் - சென்னையில் அதிர்ச்சி

பல்ப்பை விழுங்கிய 5 வயது சிறுவன்..நுரையீரலில் சிக்கி மூச்சுத்திணறல் - சென்னையில் அதிர்ச்சி
Published on

சென்னையில் ஐந்து வயது சிறுவனின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி. பல்பை, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை அறுவை சிகிச்சையின்றி அகற்றியுள்ளது.போரூர் பகுதியை சேர்ந்த ஐந்து வயது சிறுவன், எல்.இ.டி பல்பை விழுங்கியுள்ளான். இது, சிறுவனின் நுரையீரலில் சிக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில், ப்ராங்கஸ்கோபி மூலம் எல்.இ.டி.பல்பை அகற்ற முடியாத நிலையில், அறுவை சிகிச்சை ஒன்று தான் தீர்வு என கூறியுள்ளனர். இந்நிலையில், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ப்ராங்கஸ்கோபி மூலமாக, எல்.இ.டி பல்பை வெற்றிகரமாக அகற்றியுள்ளது. தற்போது சிறுவன் முழு உடல் நலம் பெற்று ஆரோக்கியத்துடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com