சத்தமின்றி கிடுகிடுவென உயர்ந்த தக்காளி - விலை கேட்டு ஆடிப்போன இல்லத்தரசிகள்
சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததை தொடர்ந்து தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு, தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் உயர்ந்து 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கேரட் விலை 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மழை தொடரும் பட்சத்தில், மற்ற காய்கறிகளின் விலையும் உயர வாய்ப்பு இருப்பதாக கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
