சென்னையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு

x

தொடர் மழை, செடிகள் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் வரத்து குறைந்து, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு சந்தையில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். புறநகர் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் 60 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட மற்ற சில காய்கறிகளின் விலையும், மழை காரணமாக வரத்து குறைந்ததால் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்