தலைகீழாய் சரிந்த தக்காளி விலை - அடேங்கப்பா இவ்ளோ குறைஞ்சிடுச்சா
பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கேரள மாநிலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கிணத்துக்கடவு பகுதிக்கு தக்காளி கொள்முதல் செய்ய வந்தனர். இந்த சூழலில், கடந்த வாரத்தில், கிலோவிற்கு சில்லறை விலையில் 50 ரூபாய் வரைக்கும் விற்பனை ஆன தக்காளியானது, இந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக 25 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதனால், பொதுமக்கள் ஒருபக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், தக்காளி விலை திடீரென வீழ்ச்சி அடைந்ததால் தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் கவலை அடைந்தனர்.
Next Story
