டோல்கேட் சர்வீஸ் சாலையில் சென்ற வாகன ஓட்டிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

x

சென்னை வானகரம் சுங்கச்சாவடி சர்வீஸ் சாலை வழியாக பயணித்ததற்கு சுங்கச்சாவடி மூலம் மீண்டும் மீண்டும் பணம் வசூலிக்கப்பட்டதாக வாகன ஒட்டி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, கதிர்வீச்சு அதிகரிப்பால் பணம் எடுக்கப்பட்டு இருக்கலாம் என சுங்க அதிகாரி அலட்சியமாக பதில் கூறியதோடு, ஜி பேவில் அவருக்கு 80 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். தற்போது மீண்டும் சர்வீஸ் சாலையில் சென்றதற்கு பணம் வசூலிக்கப்பட்டதுள்ளதால் அதிர்ச்சி அடைந்த வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்