தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையும் 232 ஆக அதிகரித்துள்ளது. 861 பேர் புதிதாக குணமடைந்துள்ள நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 762 ஆக மாறியுள்ளது. அதேசமயம் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும், 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.