Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15.05.2025) | 6 AM Headlines | ThanthiTV
- தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு... 12 இடங்களில் சதம் அடித்தது வெயில்... அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்ததால் மக்கள் அவதி... சென்னை மீனம்பாக்கத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு....
- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, கூடுதலாக 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு...நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது என்றும் கருத்து...
- பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியது அதிமுக அரசு என்றும், சிபிஐ விசாரித்த பின் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம் என்றும் ஈபிஎஸ் அறிக்கை... திமுக அரசுக்கோ, முதலமைச்சருக்கோ இதில் என்ன பங்கு இருக்கிறது? என்றும் கேள்வி...
- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைப்பு....தண்டனை கைதிகளுக்கு வழங்கும் வெள்ளை ஆடைகளை அணிந்து கொண்டு சிறைக்கு சென்றனர்......
- சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே, இன்றும் 17ஆம் தேதியும் 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து...கவரப்பேட்டை யார்டு பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே அறிவிப்பு...
- முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்....நாளை மற்றும் 18ம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு....
- 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன... காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு ரிசல்ட், பிற்பகல் 2 மணிக்கு 11ம் வகுப்பு ரிசல்ட் வெளியாகும் என அறிவிப்பு....
- மதுரை தல்லாகுளத்தில், ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகருக்கு சிறப்பு திருமஞ்சனம்....திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு....
- கோவையில் போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற நபரை சுட்டுப்பிடித்த போலீசார்...நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பாக விசாரிக்க சென்றபோது, தாக்க முயன்றதால் தற்காப்புக்காக சுட்டதாக தகவல்...
- ஐதராபாத்தில் கோலாகலமாக தொடங்கிய மிஸ் வேர்ல்ட் 2025..... பார்வையாளர்களை வியக்க வைத்த கலை நிகழ்ச்சிகள்.... தொடக்க விழா நிகழ்ச்சியில், தங்களை அறிமுகம் செய்து கொண்ட உலக அழகி போட்டியாளர்கள்....
- சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது..... ஒரு சவரன் 70 ஆயிரத்து 440 ரூபாய்க்கும், கிராம் எட்டாயிரத்து 805 ரூபாய்க்கும் விற்பனை....
Next Story