Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2025) | 6 AM Headlines | ThanthiTV

x
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.... குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தண்டனை மற்றும் அபராத விவரங்கள் அறிவிப்பு...
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்... குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் உறுதி...
  • பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு நேரில் சென்றார் பிரதமர் மோடி... ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றிய விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடி நெகிழ்ச்சி...
  • அமெரிக்கா தரப்பில் இந்தியாவுடன் பேசியபோது வர்த்தகம் குறித்து எந்த குறிப்பும் இடம்பெறவில்லை...அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்திற்கு வெளியுறவுத்துறை மறுப்பு...
  • ச‌ண்டையை நிறுத்தியதே தான்தான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்... வர்த்தகத்தை முன்னிறுத்தி, இந்த உடன்பாட்டை எட்ட வைத்த‌தாக சவுதி அரேபியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேச்சு...
  • பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்... பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டமும் நடைபெறும் என அறிவிப்பு...
  • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க 9 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்த ஏற்பாடு... முகாம்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி அளிப்பு...
  • சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மீண்டும் 720 ரூபாய் உயர்வு.... ஒரு சவரன் 70 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8 ஆயிரத்து 855 ரூபாய்க்கும் விற்பனை.....
  • சென்னை, ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை, சேலம் உள்ளிட்ட 11 இடங்களில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவு... அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில், 105 புள்ளி 8 டிகிரி ஃபாரன்ஃஹீட்டாக வாட்டி வதைத்த வெப்பம்...
  • நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது..... 88.39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிப்பு....
  • நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..... 93.66 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு....
  • கன்னியாகுமரியில், தனியார் பள்ளிகளின் 584 வாகனங்களை ஆய்வு செய்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள்...ஆய்வுக்கு வந்த வேன் ஒன்றில், அவசரவழி கதவு துணியால் கட்டப்பட்டு இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி....
  • புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு...மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஆளுநர் மாளிகை முழுவதும் சோதனை...
  • காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி, கருடசேவை உற்சவம்.... தங்கக்கருட வாகனத்தில் ஊதா நிற பட்டுடுத்தி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு.....
  • வேலூரில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஊர்வலமாக அணிவகுத்த பிரம்மாண்ட புஷ்ப பல்லக்குகள்... "ஆபரேசன் சிந்தூர்" போர் விமான மாதிரியுடன், புஷ்ப பல்லக்கில் இடம்பெற்ற தேரை, பார்த்து ரசித்த பக்தர்கள்...
  • பிரேசிலின் டொகான்டின்ஸில் (Tocantins), தன்னை பிடிக்க முயன்ற வன அதிகாரியை திடீரென கடித்த 3 மீட்டர் நீள அனகோண்டா... பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்த அதிகாரிகள்...

Next Story

மேலும் செய்திகள்