இன்றைய டாப் 10 செய்திகள் (30.07.2025) | Thanthi TV
- ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி அச்சுறுத்தலை கண்காணித்து வருவதாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
- கலிபோர்னியா, அமெரிக்காவின் பிற மேற்கு கடற்கரை மாகாணங்கள் மற்றும் ஹவாயில் உள்ள இந்தியர்கள், அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையங்கள் உட்பட அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து வரும் எச்சரிக்கைகளை கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டால் உயரமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.. கடலோரப் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அவசரநிலைக்குத் தயாராகுமாறும், மின் சாதனங்களை சார்ஜ் செய்து வைத்திருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரஷ்யாவைத் தொடர்ந்து, ஜப்பானில் சுமார் 10 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் தாக்கிய நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ஜப்பானின் ஹொக்கைடோ Hokkaido கடற்பகுதியில் சுமார் 10 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்பின.
Next Story
