இன்றைய டாப் 10 செய்திகள் (29.07.2025) | Thanthi TV
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய அமித்ஷா, பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை அறிந்து எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சி அடையவில்லை எனக் கூறினார்.
பயங்கரவாதிகளின் மதத்தைப் பற்றி வருத்தப்பட வேண்டாம் எனக் கூறிய அமித்ஷா,,, கொல்லப்பட்ட 3 பேரில் 2 பயங்கரவாதிகளின் வாக்காளர் அடையாள எண் தங்களிடம் இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு அப்பாவி பொதுமக்கள் கூட கொல்லப்படவில்லை என்றும், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள்தான் என்றும் கூறிய அவர்,,,
இந்தியாவின் தாக்குதலால் தோல்வியை ஒப்புக்கொண்டு போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்ததாகக் கூறினார்.
மன்மோகன் சிங் அரசு தங்கள் ஆட்சிக் காலத்தில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல் குறித்து மவுனமாகவே இருந்ததாக விமர்சித்த அவர்,
பயங்கரவாதிகளைக் காப்பாற்றுவதன் மூலம் வாக்கு வங்கியை வளர்ப்பவர்கள் பிரதமர் மோடியின் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கைகளை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் என்றார்.
பிரிவினையை காங்கிரஸ் ஏற்கவில்லை என்றால் பாகிஸ்தானே இன்று இருந்திருக்காது எனக் கூறிய அமித்ஷா,
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அறிவிக்குமாறு ராகுல்காந்திக்கு சவால் விடுத்தார்.
