Today Top 10 News || இன்றைய டாப் 10 செய்திகள் (31.10.2025) | Thanthi TV
- அதிமுகவை பற்றி தாம் எதுவும் பேசுவதில்லை என்றும், அதிமுகவினர்தான் தன்னை தொடர்ந்து திட்டி வருவதாகவும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதங்கம் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கொடுத்த வார்த்தைக்கு கட்டுப்பட்டு இருப்பதாகவும், தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் கூறினார். பதவி, தனக்கு வெங்காயம் போன்றது என ஏற்கெனவே தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
- அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க, எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவுக்கு, மதுரையில் இருந்து ஓபிஎஸ் உடன் ஒரே காரில் நேற்று பசும்பொன்னுக்கு சென்றார். அங்கு ஓபிஎஸ், டிடிவி.தினகரனுடன் கைக்கோர்த்த செங்கோட்டையன், சசிகலாவையும் சந்தித்தார். இந்நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ளார். அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாலும், சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு ஒழுங்குமுறையை குழைக்கும் வகையில் செயல்பட்டதாலும் நீக்கப்பட்டுவதாக ஈபிஎஸ் அறிவித்துள்ளார்.
Next Story
