இன்றைய டாப் 10 செய்திகள் (07.08.2025) | Thanthi TV
- மதுரை பாரபத்தி பகுதியில் தவெக 2வது மாநில மாநாட்டுகான ஏற்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு 13 நாட்களே உள்ள நிலையில் ஏற்பாடு பணிகள் குறித்த டிரோன் காட்சி வெளியாகியுள்ளன.இதில் பிரம்மாண்ட விழா மேடை, விஜய் நடந்து செல்லும் நடைமேடை, தடுப்பு வேலிகள், ஒலி கருவிகள் பொருத்துவதற்கான கேலரிகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது..
- மகனின் பாமக பொதுகுழுவுக்கு தடைவிதிக்க கோரி ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி அன்புமணி தலைமையில் நடக்கவிருக்கும் பாமக பொதுக்குழுவுக்கு தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதாகவும், எந்த கூட்டத்தையும் கூட்ட அன்புமணிக்கு அதிகாரம் இல்லை எனவும் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது. இதனால் பொதுக்குழு நடக்குமா நடக்காதா என பாமக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Next Story
