இன்றைய டாப் 10 செய்திகள் (03.08.2025) | Thanthi TV
டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். நாட்டின் 79ஆவது சுதந்திர தினம் வரும் 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், பஹல்காம் பயங்கரவாதிகளை அழித்த ஆபரேஷன் மகாதேவ் உள்ளிட்டவை பற்றியும் இருவரும் பேசியதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்த விவகாரம், துணை குடியரசு தலைவர் தேர்தல் அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது கவனம் பெற்றுள்ளது. முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
