சென்னைக்கு இன்று பிறந்த நாள் - வந்தாரை வாழவைக்கும் சென்னை

இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறது, தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரம்..
சென்னைக்கு இன்று பிறந்த நாள் - வந்தாரை வாழவைக்கும் சென்னை
Published on

இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறது, தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரம்... வந்தாரை வாழவைக்கும் ஊரான சென்னையின் சிறப்பு குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.இந்தியாவின் பெரிய நகரங்களுள் ஒன்றான சென்னை தனது 383 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது... பல விஷயங்களில் முன்மாதிரி நகரமாக திகழும் சென்னை, ஆசியாவின் பழமையான மாநகராட்சிகளுள் ஒன்று.கடந்த 1639 ஆம் ஆண்டு உருவான சென்னை, சென்னை பட்டணம், மதராஸ் பட்டணம் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்ட போதிலும், 1996 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் சென்னை என்ற பெயரோடு நிலைபெற்றது.உலகின் நீளமான இரண்டாவது கடற்கரை, பக்கிங்ஹாம் கால்வாய், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, தலைமைச் செயலகம், கூவம் ஆறு என நூற்றாண்டுகளை தாண்டி கம்பீரமாக நிற்கும் சென்னையின் சிறப்புகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும் தற்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா. சுப்பிரமணியன்.

X

Thanthi TV
www.thanthitv.com