

382வது சென்னை தினமான இன்று, இதுபோல் ஊர் உண்டா என, சென்னை மாநகராட்சி வீடியோ வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவில், யாரோ எவரோ இங்க வந்து பாரு, சொந்தம் ஆக்கும் நம்ம சென்னை ஊரு, இது போல் வேறு ஊர் உண்டா கூறு.... என்ற கவிதை வரிகளுடன் சென்னை தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது. ஆயிரத்து 639 ஆம் ஆண்டு இதே நாளில் சென்னை தோன்றியதை நினைவூட்டும் விதமாக, 2004ஆம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட திட்டங்களை செய்துள்ள நிலையில், மாநகராட்சி அலுவலகம், கடற்கரை சாலை, நேப்பியார் பாலம் ஆகிய வண்ண மின் விளக்கு அலங்கரிப்பில் கண்களை கவர்ந்தது.