இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11.07.2025)

x

75 வயதாகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு..

மோகன் பகவத்தின் அறிவுறுத்தல் பிரதமர் மோடிக்குத் தான் என எதிர்க்கட்சிகள் ஆரூடம்..

ஈபிஎஸ்-ம், அதிமுகவும் தமிழ்நாட்டுடன் அல்ல, டெல்லியுடன் நிற்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்...

தமிழ்நாடு என்றும் அடி பணியாது.. இது ஓரணி vs டெல்லி அணி என முதல்வர் பதிவு...

1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 1500 ரூபாயை விட்டு விட்டீர்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...

அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மனநிறைவு பெறும் வகையில் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என உறுதி..

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி...

கால வரம்பை குறிப்பிட்டு 21ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு...

கல்வி என்றால் எனது உயிர் மூச்சு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்...

படிப்பென்றால் எடப்பாடி பழனிசாமிக்கு கசக்கும் எனக்கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் பதில்...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்வு...

ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை...

பாடல் தொடர்பாக இளையராஜாவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தோம்...

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது தான் வழக்கு தொடர வேண்டும் என வனிதா விஜயகுமார் பேட்டி



Next Story

மேலும் செய்திகள்