Today Headlines | இரவு 9 மணி தலைப்புச்செய்திகள் (26.10.2025) | 9 PM Headlines | ThanthiTV

x
  • தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் அதிமுக, பாஜகவின் தப்பு கணக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.... தேர்தலை நேரடியாக சந்திக்கும் வலிமையில்லாதவர்கள், வாக்குரிமையை பறித்துவிட்டு வெற்றி பெறலாம் என கணக்கு போடுகின்றனர் என்றும் திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.....
  • கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்.... உயிரிழந்தவர்கள் குடும்பங்களை நாளை மாமல்லபுரத்தில் விஜய் சந்திக்கவுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை கரூரில் இருந்து சென்னை அழைத்து வரும் பணியை தவெகவினர் தொடங்கியுள்ளனர்....
  • விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் தான் அவருக்கு நல்லது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்... விஜய் கூட்டணிக்கு வந்தால் 220 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் இல்லாவிட்டால் 180 இடத்தில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்..
  • 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி கூட்டணியை உருவாக்குவேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்... கூட்டணி தொடர்பாக நல்ல செய்தி வரும் என்றும் அவர் கூறியுள்ளார்...
  • பைக் ரேசிங் சீசனை முடித்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜித்குமார் ஈடுபட்டுள்ளார்.. திருப்பூரில் உள்ள கொங்குநாடு தனியார் ரைபிள் கிளப்பில் நடிகர் அஜித்குமார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டார்.

Next Story

மேலும் செய்திகள்