Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (16.09.2025) | 9 AM Headlines | ThanthiTV
- வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது... நேற்றுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது...
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது...தரமணி, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக மயிலாப்பூரில் 8 புள்ளி 2 செமீ மழை பதிவாகி உள்ளது...
- திருப்பதி திருமலையில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது...தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பக்தர்கள் அவதி அடைந்தனர்...
- பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...ஆதரவற்ற குழந்தைகளின் பள்ளிப் படிப்பு முடியும் வரை மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது..
- அரசியல் என்றால், பதவி மோகத்தில் இருக்கலாம் என சிலர் நினைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் சாடினார்... தி.மு.க-வுக்கு எப்போதும் பொறுப்பு தான் முக்கியம் என பேசினார்...
Next Story
