Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (1-12-2025) | 7PM Headlines | Thanthi TV

x
  • தன்னை கட்சியில் இருந்து வெளியேற்ற ஈபிஎஸ்க்கு நீண்ட நாள் ஆசை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்... சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேண்டுமென்றே குற்றம்சாட்டி கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும் கூறியுள்ளார்...
  • சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது... இனி விடுமுறை அளிக்கப்படும் மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது...
  • சென்னை புரசைவாக்கம் தானா தெருவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்... மழைநீர் தேங்காமல் இருக்கு நட‌வடிக்கை எடுக்குமாறு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்...
  • சென்னை, எண்ணூரில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது... 13 படகுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள், 215 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது...
  • திருவாரூர் மாவட்டத்தில், டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது... பயிர் பாதிப்பை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

Next Story

மேலும் செய்திகள்