Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (29.09.2025) | 7 PM Headlines | ThanthiTV

x
  • கரூர் துயர சம்பவத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.....உயிரிழந்தவர்களுக்கு கடைசி 2,3 நிமிடங்கள் மூச்சு விட முடியாத நிலை இருந்ததாகவும், 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு விலா எலும்புகள் உடைந்து உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.....
  • கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினார்...கரூர் சம்பவம் போல் இனிமேல் நடக்கக் கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்....
  • கரூர் துயர சம்பவம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எம்.பிக்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது....பாஜக எம்.பி ஹேமமாலினி, அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட 8 எம்.பிக்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.....
  • கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து, விஜயிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்...உயிரிழந்தவர்களுக்கு ராகுல் காந்தி இரங்கல் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
  • பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க, விஜய் கரூர் செல்ல அனுமதி வழங்க வேண்டுமென, தவெக கோரிக்கை விடுத்தது...போதுமான பாதுகாப்பு வழங்கவும், தவெக மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்