Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (28.07.2025) | 7 PM Headlines | ThanthiTV

x

நமது பெண்களின் குங்குமத்தை அழித்தவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் தக்க பதிலடி....

மக்களவை விவாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு....

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் தோல்வியை ஏற்று போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் முன்மொழிந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு...

இந்திய ராணுவ வீரர்களின் வலிமை பறைசாற்றப்பட்டதாகவும் பெருமிதம்....

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் மக்களின் மனநிலையை எதிர்க்கட்சிகள் பிரதிபலிக்கவில்லை என ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு.....

எதிரி நாட்டின் எத்தனை விமானத்தை வீழ்த்தினோம் என கேட்காமல் நமது விமானம் எத்தனை வீழ்த்தப்பட்டது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவதாகவும் விமர்சனம்.....

பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்...

சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு...

ஆதார் எண், ரேஷன் அட்டை ஆகியவற்றை இருப்பிட ஆவணங்களாக பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்....

வாக்காளர் பட்டியல் திருத்த முறைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து அதிரடி....

நெல்லையில் ஐடி ஊழியர் படுகொலை வழக்கில்

கைதான பெண்ணின் சகோதரர் சுர்ஜித்திற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்...

கைதான சுர்ஜித்தின் பெற்றோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு....

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் முதல்வரின் சட்டப்பேரவை அறிவிப்புகளை செயல்படுத்த அரசாணை வெளியீடு....

4 அறிவிப்புகளை செயல்படுத்த அரசாணையை

வெளியிட்டது தமிழ்நாடு அரசு....

தமிழகத்தில் மக்களை மக்களே பாதுகாத்துக்கொள்ளும் ஆட்சி நடைபெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்....

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி என ஈபிஎஸ் அறிக்கை....

திமுக, பாஜக அரசியல் ஆதாய நாடகத்தை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை....

கீழடியில் கிடைத்த ஆதாரங்களை மறைத்து சோழர்களின் பெருமையை தற்போது பேசுவது

பாஜகவின் கபட நாடகம் என தாக்கு....


Next Story

மேலும் செய்திகள்