Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (28-12-2025) | 7PM Headlines | Thanthi TV
- அதிமுக ஆட்சிக்கு வந்தால் 5 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்... புதிய வாக்காளர்களை ஏமாற்றுவதற்காகவே லேப்டாப் வழங்கப்படுவதாகவும் விமர்சித்துள்ளார்...
- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்...
- மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் அமைதி பேரணி நடைபெற்றது. மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதி பேரணி சென்ற பிரேமலதா, விஜயகாந்த் சிலைக்கு மாலை அணிவித்து கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார்...
- கர்நாடகா மாநிலம் கார்வார் கடற்படை தளத்திற்கு சென்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம் மேற்கொண்டார். அப்துல் கலாமிற்க்கு பிறகு நீர்மூழ்கி கப்பலில் பயணித்த 2வது குடியரசு தலைவர் என்ற பெருமையை பெற்றார்
- குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ராமேஸ்வரம் வருவதையொட்டி, டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது... நாளை மற்றும் நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை விதித்து, ராமநாதபுரம் எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்...
Next Story
