Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27.12.2025) | 7 PM Headlines | Thanthi TV
ஊட்டி, கொடைக்கானலில் 2 நாட்களுக்கு உறைபனிக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... தமிழகத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்... பெயர் நீக்க ஆயிரத்து 726 விண்ணப்பம் வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது...
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டம் மாநிலங்கள் மற்றும் ஏழைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஆட்சி என்பது ஒரு தனி மனிதரின் ஆதிக்கமாக மாறிவிட்டது என்றும் விமர்சித்துள்ளார்...
திராவிட மாடல் 2.0 அமைவது உறுதி என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்... 100 நாள் வேலை திட்டத்தை சிதைத்த பாஜகவுக்கு, அதிமுக ஆதரவு அளித்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது... விழா மேடைக்கு வந்த விஜய்யை ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்..
