Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (23.12.2025) | 7 PM Headlines | Thanthi TV
- மனமகிழ் மன்றங்களில் காவல்துறை சோதனை செய்ய மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அனுமதித்துள்ளது. மனமகிழ் மன்றங்களில் பணம் வைத்து சூதாடுவதை அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
- தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது... டெல்டா மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
- கேரளா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் SIR-க்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 42 லட்சம் வாக்காளர்களும், சத்தீஸ்கரில் 27 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
- சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். 737 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தீப்தி சர்மா அசத்தியுள்ளார்
- அமெரிக்க அரசியலை உலுக்கும் எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான மேலும் 29 ஆயிரம் பக்கங்கள் வெளியாகியுள்ளது.. அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள ஆவணங்களில், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு சொந்தமான ஜெட் விமானத்தில் அதிபர் டிரம்ப் எட்டு முறை பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல் இடம்பெற்றுள்ளது...
Next Story
