Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2026) | 7PM Headlines | Thanthi TV

x
  • செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், பிரதமர் மோடி தலைமையில் NDA கூட்டணி பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது... பொதுகூட்ட மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது...
  • பிரதமர் சொல்லும் டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்... டபுள் எஞ்சின் மாநிலங்களான உ.பி., ம.பி., பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட "டப்பா எஞ்சின்" நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறப்பதாகவும் கூறியுள்ளார்..
  • டெல்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு தலைகுனியாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்... தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்...
  • திமுகவை வீழ்த்த அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.. எந்த குழப்பமும், அழுத்தமும் இன்றி கூட்டணியில் அமமுக இணைந்துள்ளதாக அவர் கூறினார்..
  • மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் முடிந்த பிறகு, எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் அருகருகே அமர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்... அனைத்தையும் மறந்து ஒன்றாக இணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்