Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22.12.2025) | 7 PM Headlines | Thanthi TV
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுடன் தொலைபேசியில் உரையாடினார் பிரதமர் மோடி.. இரு நாடுகள் இடையே, தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவு பெற்றுள்ளதாக, இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக அறிவித்துள்ளனர்...
தமிழகத்தில் ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை ஏமாற்றத்தை அளித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தங்கம் விலை, அடுத்தாண்டும் கணிசமாக உயரும் என்று, தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்... தங்கம் இந்த ஆண்டில் 67 விழுக்காடு லாபத்தை கொடுத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்..
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது 97 லட்சம் வக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 92 ஆயிரத்து 626 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனவரி 18 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கியுள்ளது.
திமுகவின், சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் எம்.பி. கனிமொழி தலைமையில் நடைபெற்றது.. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது, பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்து கேட்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது...
