Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19.09.2025) | 7 PM Headlines | ThanthiTV

x
  • திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...
  • தீபாவளி மற்றும் ஆயுத பூஜை விழாக் கால விடுமுறைக்காக நெல்லை மற்றும் குமரிக்கு சென்னை சென்ட்ரல் மற்றும் செங்கல்பட்டில் இருந்து சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது...
  • தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்....கல்லூரி செமஸ்டர் தேர்வு என்பது பல்கலைக்கழகத்தால் வரையறுக்கப்பட்ட விஷயம் என கூறினார்...
  • ஊட்டி, கொடைக்கானலைப் போல் வால்பாறையிலும் நவம்பர் 1 முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
  • நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட 474 அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.. தமிழகத்தில் இருந்து 42 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 808 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்