Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19.01.2026)| 7 PM Headlines | Thanthi TV

x
  • விஜயின் ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது... சென்சார் சான்று கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியிருந்த நிலையில், நாளை விசாரணை...
  • தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் நாளை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்... காலமுறை ஊதியம், சிறப்பு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்...
  • பாஜக தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார், தேசிய செயல் தலைவர் நிதின் நபின்... வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், நாளை தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்கிறார்..
  • டெல்லி விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடியும், யுஏஇ அதிபரும் ஒரே காரில் பயணித்தனர்... ஈரான்-அமெரிக்க உறவுகளில் ஏற்பட்ட விரிசல் மற்றும் மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து இருவரும் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது...
  • ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் இந்தியா வருகை... டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடி வரவேற்றார்..
  • 96 நாட்கள் நீடித்த வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இருந்து விலகியது... வடகிழக்கு பருவமழையில் 3 புயல்கள் வங்ககடலில் உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...

Next Story

மேலும் செய்திகள்