Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18.01.2026) | 7 PM Headlines | Thanthi TV
- தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சென்னை திரும்புவதால், நெல்லை ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.. முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்து இடம்பிடித்து வருகின்றனர்...
- தென்மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்ப ஆம்னி பேருந்து கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது... நெல்லையில் இருந்து சென்னை செல்ல 4 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
- தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் நிறைவடைந்தது... வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், 13.3 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்...
- வரும் தேர்தலில் பாமக சார்பில் மிகப்பெரிய வெற்றி கூட்டணி அமைக்கப்படும் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்... கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்....
- பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சென்னை மெரினா கடற்கடையில் கூட்டம் அலைமோதுகிறது.... குடும்பத்தோடு கடற்கரையில் அமர்ந்து கடலின் அழகை ரசித்து வருகின்றனர்...
Next Story
