Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17.07.2025) | 7 PM Headlines | Thanthi TV

x

சென்னை, செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு...

நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஜூலை 20 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல்...

பொறியியல் மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கான முதல் கட்ட முடிவுகள் வெளியீடு...

36 ஆயிரத்து 731 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மாணவர் சேர்க்கை குழு விளக்கம்...

தமிழகத்தின் 13 மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு....

எம்.டி மற்றும் எம்.எஸ் முதுகலை படிப்புகளில் கூடுதலாக 488 இடங்கள் ...

காமராஜர் பற்றிய சர்ச்சைக்குரிய மற்றும் வீண் விவாதங்களை தவிர்ப்போம்...

கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்...

காமராஜர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா ஒரு வாரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும்...

முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் எச்சரிக்கை...

காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தி.மு.க எம்.பி திருச்சி சிவா...

திருச்சி சிவாவின் வீட்டை முற்றுகையிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கைது...

கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆர்.சி.பி., கர்நாடக கிரிக்கெட் வாரியம் மீது

கிரிமினல் வழக்கு...

குன்ஹா அளித்த அறிக்கை தொடர்பான ஆலோசனைக்கு பிறகு கர்நாடக அரசு ஒப்புதல்...

குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களை கேட் கீப்பர்களாக பணியில் அமர்த்த வேண்டும்...சென்னையை அடுத்த மாங்காட்டில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய தனியார் பள்ளி மாணவி லாரி மோதி படுகாயம் அடைந்த சம்பவம்

பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை எனக் கூறி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்...

தொடர் விபத்துகளை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்