Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (13.12.2025) | 7 PM Headlines | ThanthiTV
- 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி ஹைதராபாத் சென்றடைந்தார்... தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேரில் வரவேற்றார்...
- டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு.. பொதுமக்கள் வழங்கிய மனுக்களை நிர்மலா சீதாரமனிடம் வழங்கியதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்..
- மைதானத்தில் இருந்து மெஸ்ஸி சீக்கிரமே வெளியேறியதால், ரசிகர்கள் ஆத்திரம்... மைதானத்திற்குள் புகுந்து தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளை...
- சால்ட் லேக் மைதானத்தில் தடுப்புகளை உடைத்து உள்ளே புகுந்த ரசிகர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்... தற்காலிக கூடாரங்களை உடைத்து தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
- மெஸ்ஸியின் வருகையை வணிகமயமாக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செயல்பட்டுள்ளதாக மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் விமர்சித்துள்ளார்... ரசிகர்களின் உணர்வுகளைப் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புறக்கணித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்...
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, 4 காவல் அதிகாரிகள் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்... மேலும் பொதுமக்கள் 4 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்...
Next Story
