Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (08-12-2025) | 7PM Headlines | Thanthi TV
- நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்... தனது துறையின் சாதனைகளை மறைத்து, எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்...
- வந்தே மாதரம் பாடலை மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அவமதித்ததாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவையில் வந்தே மாதரம் குறித்த சிறப்பு விவாதத்தில் உரையாற்றிய பிரதமர், இந்த பாடல் இஸ்லாமியர்களை தூண்டிவிடும் என்று நேதாஜிக்கு, நேரு கடிதம் எழுதினார் என்று குற்றஞ்சாட்டினார். நேருவின் வழியில், தற்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வந்தே மாதரம் குறித்த விவாதத்திற்கு வரவில்லை என்றும் பிரதமர் மோடி விமர்சித்தார்.
- கடலூர் மாவடம் காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரியில் உபரிநீர் வெளியேற்றம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏரிக்கான நீர்வரத்து 241 அடியாக குறைந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏரியின் கொள்ளளவு 45 புள்ளி 58 கன அடியாக உள்ள நிலையில், சென்னையின் குடிநீர் தேவைக்காக மட்டும் விநாடிக்கு 73 கன அடி வீதம் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முத்துப்பேட்டை ஆட்டோ ஓட்டுநர் நகரில் சென்ற அரசுப் பேருந்தின் சக்கரம், சாலையில் கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர். ஆற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கல்புதூர் நோக்கி அரசு பேருந்து சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. ஓட்டுநார் சாதுர்யமாக செயல்பட்டு சாலையோரம் பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடலூரைச் சேர்ந்த பக்தர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்... சபரிமலையில் மாரடைப்பு, உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்...
Next Story
