Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (04.01.2026) | 7 PM Headlines | Thanthi TV
- ஏப்ரல் 2வது வாரத்தில் தமிழ்நாட்டில் NDA தலைமையிலான ஆட்சி அமையும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்... இன்னும் பிற கட்சிகளுடன் இணைந்து பாஜக வலுவான கூட்டணி அமைக்கும் என்றும் அவர் கூறினார்..
- சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படத்தின் டிரைலர் வெளியானது... சுதா கொங்கரா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது...
- பொங்கலுக்கு ரூ.3000 கொடுத்துவிட்டால் வாக்கு கிடைக்கும் என முதல்வர் நினைப்பதாக அண்ணாமலை விமர்சித்தார்... தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்...
- பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது.. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் நிலையில், வரும் 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது...
- அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசு, பொங்கல் பரிசுத் தொகுப்பு, வேட்டி, சேலைகள், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
