மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-08-2025) | 6PM Headlines | Thanthi TV

x
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு...நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் 29ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
  • நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கணபதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன...அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்....
  • திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படைக்கப்பட்டது...ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்...
  • விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்தத்தையொட்டி, 2 ஆயிரத்து 702 சிறப்பு பேருந்துகளின் இயக்கப்பட்டன...ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 504 பேர் பயணித்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்...
  • மதுரை தவெக மாநாட்டில் பவுன்சர்களால் இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில், விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில், விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...
  • ஜம்மு காஷ்மீர், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், ஆறுகளுக்கு அருகில் வசிக்கும் மக்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்...



Next Story

மேலும் செய்திகள்