Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11.06.2025) | 6 AM Headlines | ThanthiTV

x
  • கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, தமிழகத்துக்கான நிதியை ஒதுக்க வேண்டும்... மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  • ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல்வேறு நாடுகளுக்கு சென்று விளக்கம் அளித்த எம்.பி-க்கள் குழுவினருடன் பிரதமர் மோடி சந்திப்பு...இந்தியாவின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தியதற்காக பாராட்டு...
  • சென்னை தரமணியில் நவீன உலகளாவிய வணிக மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்... இந்தியாவின் வளர்ச்சி எஞ்சின் என்றால் அது தமிழ்நாடு தான் என பெருமிதம்...
  • இந்தியாவின் மிக முக்கியமான மின்னணு உற்பத்தி மையமாக தமிழ்நாடு உருவெடுக்கிறது... சென்னை ஐஐடி-ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசியபோது, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புகழாரம்...
  • மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு... திமுக, அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் வேட்புமனு ஏற்பு...
  • பாமக வழக்கறிஞர் சமூகநீதி பேரவை தலைவர் பதவியில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கப்படுவதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு... கடலூர், திருவண்ணாமலைக்கு புதிய மாவட்டத் தலைவர் மற்றும் நிர்வாகிகளையும் நியமித்தார்...
  • பாமகவில் வரும் 15ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு... தருமபுரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கான பொதுக்குழு கூட்டத்திற்கு அட்டவணையை வெளியிட்டார்...
  • திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • சென்னையில் மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல், விமானங்கள் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு... பெங்களூரு, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்த 12 விமானங்கள் வானில் வட்டமடித்த நிலையில், மழை ஓய்ந்த பிறகு ஒன்றின்பின் ஒன்றாக தரையிறங்கின...
  • ராஜஸ்தான் மாநிலம் பனாஸ் நதியில் குளிக்கச் சென்ற 8 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு... முதலில் 2 பேர் மூழ்கிய நிலையில், காப்பாற்ற சென்று அடுத்தடுத்து 8 இளைஞர்கள் உயிரிழந்த சோகம்...
  • கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே தீ விபத்தால் சேதமடைந்து சாய்ந்த நிலையில் நிற்கும் சரக்கு கப்பல்...மாயமான 4 மாலுமிகளை தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள், பூச்சிக்கொல்லிகள் கப்பலில் உள்ளதாக தகவல்...
  • மேகாலயாவில் தேனிலவுக்கு அழைத்துச் சென்று கணவரை, காதலனுடன் சேர்ந்த கொலை செய்த கொடூர சம்பவம்... இளம்பெண்ணை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை...
  • ஆஸ்திரியாவில் பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் உள்பட 9 பேர் உயிரிழப்பு... சம்பவத்தில் ஈடுபட்ட நபரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை....
  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகோலஸ் பூரன் ஓய்வு... 29 வயதில் ஓய்வை அறிவித்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி...

Next Story

மேலும் செய்திகள்